இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது
இப் பிரேரணையின்படி, குறித்த சீருடையை அனைத்து உலமாக்களும் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை. எனினும், அந்தச் சீருடையை அணிந்திருப்பவர்களுக்கே அரச ரீதியான ‘உலமாக்கள்’ என்ற உத்தியோகபூர்வ கௌரவம் வழங்கப்படும்.மௌலவி அல்லாத எவரும் அந்தச் சீருடையை அணியக் கூடாது. மீறி அணிபவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
சில தரப்பினர் இது இஸ்லாமா என வினவக்கூடும். அதற்குப் பதிலளிக்கும் வகையில், முஸ்லிம் நாடுகளில் இராணுவம் மற்றும் பொலிஸாருக்குரிய சீருடை, மாணவர்களுக்கான சீருடை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் என்பன வழங்கும் அடையாள அட்டை என்பவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றனவோ அதே போன்றதொன்றே இதுவாகும்.இவை எவைபற்றியும் கேள்வி எழுப்பாமல் சமூக நலனுக்காக ‘மஸ்லஹா ஆம்மா’ என்ற அடிப்படையில் இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதற்கு இஸ்லாம் முழுமையான அனுமதியளித்துள்ளதுடன், நமது நாட்டின் சமூக கலாசாரத்திற்கு ஏற்ப இவை உருவாக்கப்பட வேண்டும் எனவும் முபாறக் அப்துல் மஜீத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




