28.8 C
Jaffna
March 2, 2025
Pagetamil
குற்றம்

பருத்தித்துறையில் பாடசாலை மாணவர்களின் 20 துவிச்சக்கர வண்டிகளை திருடியவர் கைது!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை சுப்பர்மடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இன்று கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளில் 20 துவிச்சக்கர வண்டிகளைத் திருடி விற்பனை செய்துள்ளதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவற்றில் 10 துவிச்சக்கர வண்டிகளே கைப்பற்றப்பட்டுள்ளன. ஏனையவை தேடப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் கூறினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!