28.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 16ஆம் நாள்: ‘உக்ரைனின் முள்ளிவாய்க்காலாக’ மாறியது மரியுபோல் நகரம்

♦மேலும் 5 நகரங்களிலிருந்து மனிதாபிமான நடைபாதைகளை ரஷ்யா உருவாக்குகிறது.

♦ரஷ்யாவிற்கு பிரச்சனையேற்படுத்த மேற்கு நாடுகள் முயன்றால், உலகம் உணவுப்பாதுகாப்பில் சிக்கலை சந்திக்குமென புடின் எச்சரிக்கை

♦உக்ரைனில் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நிலைமை மோசம்


ரஷ்யா 5 உக்ரேனிய நகரங்களில் இருந்து மனிதாபிமான நடைபாதைகளை திறக்க உள்ளது

5 உக்ரைனிய நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற வசதியாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை போர்நிறுத்தத்தை அறிவித்து, மனிதாபிமான நடைபாதையை உருவாக்குமென தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவை மேற்கோள் காட்டி, மக்கள் ரஷ்யா அல்லது உக்ரைனில் உள்ள பிற நகரங்களுக்கு பயணிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கெய்வ், சுமி, கார்கிவ், மரியுபோல் மற்றும் செர்னிஹிவ் ஆகிய ஐந்து நகரங்களிலேயே இந்த மனிதாபிமான நடைபாதைகள் உருவாக்கப்படவுள்ளன.


ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் மேற்கு நாடுகளுக்கு எதிராக மீண்டும் திரும்பும். உணவு மற்றும் எரிசக்தி விலைகள் உட்பட பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பார்கள். ரஷ்யா தனது பிரச்சினைகளைத் தீர்த்து வலுவானதாக வெளிப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார்.

(முழுமையான செய்திக்கு)


ரஷ்ய படையினரின் சரணடைதலை உக்ரைன் அரசாங்கம் புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்ளும் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு ரஷ்ய சிப்பாயும் உடனடியாக சரணடையுமாறு நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன். ரஷ்யாவின் சரணடைதலை உக்ரைன் புரிந்துணர்வோடு ஏற்றுக்கொள்ளும்” என்று ரெஸ்னிகோவ் வியாழன் அன்று ஃபேஸ்புக்கில் எழுதினார்.

ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமையிலான உக்ரைனின் தலைமை கியேவில் உள்ளது என்றும் அவர் கூறினார். “அரசாங்க உறுப்பினர்கள் அனைவரும் வேலை செய்கிறார்கள், அனைவரும் தங்கள் வேலைகளில் இருக்கிறார்கள். அது ரஷ்யாவிற்கு எவ்வளவு அவமானமாக இருந்தாலும் சரி, ” என குறிப்பிட்டார்.


ரஷ்ய தூதரகத்தின் தகவல் இடுகைகளை நீக்கிய ருவிற்றர்!

மார்ச் 9 அன்று மரியுபோலில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் ரஷ்யாவின் தலையீட்டை மறுக்க முயன்ற இங்கிலாந்தில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பதிவுகளை, ருவீற்றர் நீக்கியுள்ளது.

வன்முறை சம்பவங்களை மறுத்ததற்காக பதிவுகளை நீக்கியதாக ருவிற்றர் தெரிவித்துள்ளது.


முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோல் நிலைமை பயங்கரம்!

கடந்த வாரம் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரத்திலிருந்து  பொதுமக்கள் வெளியேற முடியவில்லை என்று உக்ரைன் கூறுகிறது.

ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்ய ‘பயங்கரவாதம்’ என குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யப் படைகள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கத் தவறியதால், சுற்றி வளைக்கப்பட்ட உக்ரைன் நகரமான மரியுபோலிலிருந்து ஒரு குடிமகனும் வெளியேற முடியவில்லை என்று உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ரஷ்ய டாங்கிகள் மனிதாபிமான நடைபாதையை தாக்கியதால், நகரத்திற்குள் உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை அனுப்பும் முயற்சிகள் தோல்வியடைந்தன என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

“இது அப்பட்டமான பயங்கரவாதம் … அனுபவம் வாய்ந்த பயங்கரவாதிகளிடமிருந்து,” என்று அவர் கூறினார். “இதை உலகம் அறிய வேண்டும். நான் அதை ஒப்புக்கொள்ள வேண்டும் – நாம் அனைவரும் ஒரு பயங்கரவாத அரசைக் கையாளுகிறோம்” என்றார்.

எனினும், நேற்று மரியுபோல்நகரத்திலிருந்து சில பொதுமக்கள் வெளியேறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

நேற்று அந்த நகரிலிருந்து வெளியேறிய மரியா மொஸ்கலேனோ என்ற பெண், தனது பெற்றோர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டதாக கூறுகிறார். “இது ஒரு முழு திகில், இது ஒரு மனிதாபிமான பேரழிவு,” என கூறினார்.

“முற்றுகை முடியும் வரை அவர்களுக்கு உணவு கிடைக்குமா என்பது  தெரியாது.”

“இது ஒரு பேரழிவு, இது மிகவும் பயமாக இருக்கிறது … ரஷ்யர்கள் தொடர்ந்து குண்டு வீசுகிறார்கள், … தொடர்ந்து, ரொக்கெட்டுகள் அவர்களைச் சுற்றி பறக்கின்றன, அவர்கள் உண்மையில் பயப்படுகிறார்கள், அவர்களுக்கு இரட்சிப்பின் நம்பிக்கை இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை குண்டுவீச்சு நடப்பதாக மரியுபோல் மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் விமானங்கள் மரியுபோல் நகரத்திற்கு வந்து குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்தின. பொதுமக்கள் – முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

மேயரின் ஆலோசகரான பெட்ரோ ஆண்ட்ருஷென்கோ, ரஷ்யர்கள் “எங்கள் மக்களை நீஅழிக்கவிரும்புகிறார்கள்” என்றார்.

தற்போது அங்கு 400,000 மக்கள் சிக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


ரஷ்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நாபாதுகாப்புசபை கூடுகிறது

ரஷ்யாவின் வேண்டுகோளின் பேரில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

உக்ரைனில் அமெரிக்க உயிரியல் நடவடிக்கைகள் பற்றி ரஷ்யா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி விவாதிக்க பாதுகாப்பு சபை கூடவுள்ளது.

உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்த அமெரிக்கா தயாராகிக் கொண்டிருப்பதாக ரஷ்யா எச்சரித்திருந்தது. சீனாவும் இதே கருத்தை தெரிவித்திருந்தது.

எனினும், இது ‘சிரிப்புக்குரியது’ என்று ரஷ்யாவின் கூற்றுக்களை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

Leave a Comment