ரஹ்மானின் ஸ்டுடியோவிற்கு சென்ற இளையராஜா!

Date:

இளையராஜா சமீபத்தில் டுபாயில் நடைபெற்ற டுபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியில் தனது இசைக்கச்சேரியை நடத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரது இசை நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்தனர்.

டுபாயில் தங்கியிருந்த இளையராஜா, அங்கு அமைந்துள்ள ரஹ்மானின் ஃபிர்டாஸ் ஸ்டுடியோவிற்கு சென்றார். அவரை வரவேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது ஸ்டுடியோவைக் காட்டினார்.

அப்போது எடுக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்த ரஹ்மான், ‘எங்களது ஃபிர்டாஸ் ஸ்டுடியோவிற்கு மேஸ்ட்ரோ இளையராஜாவை வரவேற்பதில் மகிழ்ச்சி. அவர் விரைவில் எங்களது ஃபிர்டாஸ் இசைக்குழு இசைப்பதற்காக ஒரு இசையை உருவாக்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இருவரையும் இணைத்து பார்ப்பது எங்களுக்கு அற்புதமான நாள் என பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பதிலளித்த இளையராஜா, ‘கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய் கப்பல்கள் எரிகின்றன: ஈரான் புரட்சிகர காவல்படை

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் செல்லும்போது கண்ணிவெடிகளில் மோதியதில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ் வாசி பிணையில் விடுதலை!

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்