மாலைதீவில் தற்கொலை செய்தாரா இலங்கை உதைபந்தாட்ட வீரர்?: தாயார் சந்தேகம்!

Date:

மாலைதீவில் மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்து வீரர் டக்ஸன்  பியூஸ்லஸ் மரணம் குறித்து முழு அளவிலான விசாரணையை மேற்கொள்ளுமாறு அவரது தாய் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

தனது மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாலைதீவில் இடம்பெறும் திவேஹி பிரீமியர் லீக் போட்டியில் மாலைதீவின் வலென்சியா அணிக்காக ஆடும், இலங்கையை சேர்ந்த டக்ஸன்  பியூஸ்லஸ் தனது தங்குமிடத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கடந்த 26ஆம் திகதி நடந்த போட்டியில் அவர் காயம் காரணமாக ஆடவில்லை. அன்றைய தினம் அவரது தங்குமிடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாலைதீவு பொலிசார் தெரிவித்தனர்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய டக்ஸன்  பியூஸ்லஸ், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்றவர். இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியிலும், வடமராட்சி வதிரி டயமன்ட்ஸ் அணியிலும், மாலைதீவின் வலென்சியா அணி இடம்பெற்றிருந்தார்.

தனது மகன் தற்கொலை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை என அவரது தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மன்னாரிலுள்ள டக்ஸன்  பியூஸ்லஸின் தாயாரிடம் மன்னார்  பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதன்போதே, மேற்படி சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்