நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
காலை வேளையில் 5 மணித்தியால மின் தடை அமுல்படுத்தப்படும் அதேவேளை இரவில் இரண்டு மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
26 வருடங்களின் பின் இலங்கையில் மிக நீண்ட மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.



