திருகோணமலை – உவர்மலை பகுதியில் பாடசாலை மாணவன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளானதில், அதனை செலுத்திச் சென்ற 15 வயதான மாணவன் உயிரிழந்துள்ளார்.
அதில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்தனர்.
நேற்று (01) இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாது.
திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த கே.வை. சஹன் மதுசங்க (15) என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த மாணவன் தனது மூத்த சகோதரனின் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாத இரண்டு நண்பர்களை ஏற்றிக் கொண்டு உவர்மலை பகுதியில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த ஏனைய இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்த மாணவருக்கோ அல்லது காயமடைந்தவர்களுக்கோ செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



