உக்ரைன் அழகி எடுத்த ‘உக்கிரமான’ முடிவு!

Date:

உக்ரைனின் முன்னாள் அழகு ராணி ஒருவர் ரஷ்ய படைகளை எதிர்த்துப் போராட தனது நாட்டின் இராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

அனஸ்டாசியா லென்னா 2015 ஆம் ஆண்டில் 24 வயதில் தேசிய அழகுராணிப் போட்டியின் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார்.

இந்த மொடல் தனது கவர்ச்சியான வாழ்க்கை முறையை மாற்றி உக்ரைனுக்காக ஆயுதம் தூக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

துருக்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக பணிபுரிந்த அவரது வேலையிலிருந்து விலகி, ஆயுதம் தூக்கியுள்ளார்.

ஏர்சாஃப்ட் என்று தலைப்பிடப்பட்ட அனஸ்தேசியாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், ஆயுதத்தை பயன்படுத்துவதில் அவருக்கு அனுபவம் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக மரங்கள் நிறைந்த அரங்கங்கள் மற்றும் உட்புறப் பயிற்சி மைதானங்களில் முழு இராணுவ ஆடைகளுடன் கூடிய புகைப்படங்களை அவர் பலமுறை பகிர்ந்துள்ளார்.

இதனால், இப்பொழுது அவரது அறிவித்தல் உண்மையானதா அல்லது வழக்கமாக லைக்கிற்காக இடப்படுவதை போன்றதா என்பது தெரியவில்லை.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்