டீசல் சலுகை வழங்காவிட்டால் திங்கள் முதல் பொதுப்போக்குவரத்தும் முடங்கும்!

Date:

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருள் விலையை திருத்தியமைத்துள்ள நிலையில், டீசல் சலுகை வழங்கப்படாவிட்டால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித், எரிபொருள் விலை உயர்வு, எரிபொருள் செலவு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகள் அதிகரிப்பதால் போக்குவரத்து துறை ஊழியர்களின் வருவாயை நேரடியாக பாதிக்கும் என்றார்.

பொதுப் போக்குவரத்துத் துறைக்கு எரிபொருள் விலையில் சலுகை வழங்க வேண்டும் என்று பிரியஞ்சித் கேட்டுக் கொண்டார்.

சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஜூலை மாதம் வரை பஸ் கட்டணத்தை மாற்றியமைப்பதில்லையென தாங்கள் ஒருபோதும் அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளிக்கவில்லை என்றார்.

பெரும்பாலான CEYPETCO எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் தீர்ந்துவிட்டதால் பொதுமக்கள் IOC எரிபொருள் நிலையங்களில் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும் என விஜேரத்ன கூறினார்.

உள்ளூர் டீசல் வளங்கள் குறைவதால், பொது போக்குவரத்து அமைப்புகள் முற்றிலுமாக ஸ்தம்பிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

விஜேரத்ன, உள்ளூர் டீசல் கையிருப்புகளில் பெரும்பான்மையானவை மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதன் பின்னர் எஞ்சியதே பொதுமக்களுக்கு  வழங்கப்படுகிறது என சுட்டிக்காட்டினார்.

தீர்வு வழங்கப்படாவிட்டால், திங்கட்கிழமைக்குள் பொது போக்குவரத்து துறை ஸ்தம்பிக்கும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்