குழந்தையை பிரியும் தந்தை… நிலத்தடியில் பதுங்கியுள்ள மக்கள்: உக்ரைன் மக்களின் துயரத்தை பிரபலிக்கும் காணொளி தொகுப்பு!

Date:

ரஷ்ய படைகள் உக்ரைனின் மீது இரண்டாவது நாளாக கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனில் இதுவரை தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் பலியாகிவிட்டதாகவும், ஏராளமான வீடுகள் தரைமட்டமாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏவுகணை தாக்குதலுக்கு அஞ்சி, நிலக்கீழ் மெட்ரோ ரயில் நிலையங்களில் நேற்றைய இரவை மக்கள் கழித்தனர்.

ஏராளமான மக்கள் அண்டை நாடுகளிற்கு கால்நடையாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், உக்ரைனில் மக்கள் எதிர்கொள்ளும் துயரத்தை நெட்டிசன்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அவற்றின் தொகுப்பு-

1.உக்ரைனில் 18 – 60 வயதான ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டில் தங்கி ரஷ்யாவுடன் போரிட அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறும் குடும்பத்திற்கு, தந்தையொருவர் விடை கொடுத்தார். தனது பிஞ்சுக்குழந்தைக்கு அவர் விடை கொடுத்த காட்சி-

2. ”நாங்கள் எங்கே போவோம்… நீங்களே கூறுங்கள், எங்களது வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன” – கண்ணீர்விட்டு அழும் உக்ரைன் மக்கள்.

3. உக்ரைனில் உள்ள கார்கிவ் பல்கலைக்கழகத்தின் அடிதளத்தில், இந்திய மாணவ, மாணவிகள் தங்கி இருக்கும் காட்சி.

4. ஏவுகணை தாக்குதலிற்கு அஞ்சி, உக்ரைன் மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ள காட்சி.

5. உக்ரைன் முதியவர் ஒருவர் செலுத்தி வரும் காரை, ரஷ்யாவின் கவச வாகனம் மோதித்தள்ளியது. முதியவர் உயிரிழந்தார்

6. உக்ரைனின் குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்ய விமானமொன்று தாக்குதல் நடத்துவது கண்டு குழந்தை அழும் காட்சி

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்