26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

’48 மணித்தியாலத்திற்குள் தாக்குதல் ஆரம்பிக்கும்’: உக்ரைனிற்கு அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி!

உக்ரைன் நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் முழு அளவிலான ரஷ்ய படையெடுப்பு நடக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உக்ரைன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் அரசாங்கத்தையும் வங்கிகளையும் குறிவைத்து ஒரு ‘பாரிய’ சைபர் தாக்குதலால் உக்ரைன் தாக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ரஷ்ய துருப்புக்களின் ‘உடனடி’ தாக்குதல் குறித்து உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிடென் எச்சரித்தார்.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ், உக்ரேனிய-ரஷ்ய எல்லைக்கு அருகில் இருப்பதால், ரஷ்ய படையெடுப்பில் குறிவைக்கப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தலைவர்கள் அஞ்சுகின்றனர்.

உக்ரைனிய எல்லைக்கு அருகில் குவிக்கப்படும் ரஷ்ய டாங்கிகள்

நேற்று இரவு, 100க்கும் மேற்பட்ட டிரக்குகளில் இராணுவ வீரர்களுடன் ஒரு பெரியஈராணுவத் தொடரணி நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

“அமெரிக்க உளவுத்துறை தகவலின் அடிப்படையில் 48 மணி நேரத்திற்குள் ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கும் என்று உக்ரைன் ஜனாதிபதிக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது” என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு சேவை மற்றும் அமைச்சரவையின் இணையதளங்கள் அனைத்தும் புதன்கிழமை பிற்பகல் சைபர் தாக்குதலுக்குப் பிறகு செயல்படவில்லை. பல அரசாங்க கட்டிடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இது ரஷ்யாவின் உளவியல் அழுத்தமாக கருதப்படுகிறது.

உக்ரைன் முழுவதும் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு சைபர் தாக்குதல் நடந்தது.

உக்ரைனியர்கள் ரிசர்வ் படையில் இணையும்படி அழைப்பு விடுக்கப்பட்டதுடன், ரஷ்யாவில் தங்கியுள்ள 3 மில்லியன் உக்ரைனியர்களை நாடு திரும்பவும் உக்ரைன் அறிவித்தது.

எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்குமென்பதை உக்ரைன் அரசும் ஏற்றுக்கொண்டது.

நிலைமை இறுகியதும், பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், உக்ரைன் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள உதவுவதற்கு மேலும் ஆயுதங்களை அனுப்புவதாக உறுதியளித்தார். அச்சுறுத்தலை ரஷ்யா மேலும் அதிகரித்தால் ரஷ்யாவிற்கு எதிராக மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் ஜோன்சன் உறுதியளித்தார்.

நேற்று, உரையாற்றிய விளாடிமிர் புடின், தனது துருப்புக்களின் ‘போர் தயார்நிலையை’ பாராட்டினார், அதே நேரத்தில் ரஷ்ய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க அவர்கள் போராடுவார்கள் என்றும், ரஷ்யாவின் நலன்கள் பேரம் பேச முடியாதது’என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், உக்ரைனிலுள்ள தனது தூதரக ஊழியர்களை ரஷ்யாவும் வெளியேற்றியது.

உடல்களை பொதி செய்யும் 45,000 பிளாஸ்டிக் உடல் பைகளை ஓர்டர்  செய்துள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதல் அடுத்த 24 மணி நேரத்தில் நிகழ வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ரஷ்யஎபாதுகாப்பு அமைச்சர், ஆயுதப் படைகளின் தலைவர்கள், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 351 பேர் மற்றும் முக்கிய பிரச்சாரகர்களை குறிவைத்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பரந்த அளவிலான பொருளாதாரத் தடைகளை விதித்தது. செவ்வாயன்று அமெரிக்காவும் இங்கிலாந்தும் தன்னலக்குழுக்கள் மற்றும் வங்கிகளை குறிவைத்து தடைகளை அறிவித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியது.

அமெரிக்கத் தடைகள் ஒரு ‘வலுவான பதிலுடன்’ சந்திக்கப்படும் என்பதில் ‘சந்தேகமே இல்லை’ என்று ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.

உக்ரைன் எல்லைக்கருகில் ரஷ்ய படைக்குவிப்பை புலப்படுத்தும் செயற்கைக் கோள் படம்

பிடென் நேற்றிரவு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் முதல் கட்டத்தை அறிவித்தார். ரஷ்யா தாக்குதல் அச்சுறுத்தலை தீவிரமடைந்தால் மேலும் பலவற்றைச் செய்யத் தயாராக இருப்பதாக எச்சரித்தார்.

மேலும் நேட்டோ துருப்புக்களை ஐரோப்பாவிற்கு அனுப்பவும் அவர் உத்தரவிட்டார். 800 வீரர்கள் இத்தாலிக்கு அனுப்பப்படுகிறார்கள். டஜன் கணக்கான அப்பாச்சி ஹெலிகொப்டர்கள் பால்டிக்ஸ் மற்றும் போலந்திற்கு அனுப்பப்பட்டது. மேலும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணியின் முதல் நிரந்தர தளம் அமைக்கப்படுவதன் வாய்ப்பும் உயர்ந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

47வது அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்

east tamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

Leave a Comment