வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடடம் மற்றும் பல்கலைக்கழக கல்வெட்டு என்பவற்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் இன்று (11.02) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இலங்கையின் 17 வது பல்கலைக்கழகமாக கடந்த ஓகஸ்ட் மாத்தில் இருந்து செயற்பட தொடங்கிய வவுனியா பல்கலைக் கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிதியாக கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பல்கலைக்கழக பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன், பல்கலைக்கழத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண்டபத்தினையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திறப்பு விழாவிற்காக அமைக்கப்பட்ட கல்வெட்டில் தமிழ் மொழியிலான கல்வெட்டு பிரதான பாதையை நோக்கியமாக அமைக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று இரவு அவசரகதியில் மாற்றம் செய்யப்பட்டு, பிரதான வாயிலை நோக்கி சிங்கள மொழியிலான கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது. அந்த கல்வெட்டே சம்பிதாய பூர்வமாக திறக்கப்பட்டது.




