மனதிற்குள்ளேயே திருமணம் செய்த நடிகை!

Date:

மனதிற்குள் கோயில் கட்டி வாழும் நடிகைகளை சினிமாவில் பார்த்திருப்போம். சினிமாவில பார்க்கும் அப்படியான நாயகிககளை போன்றவரே தான் என கூறியிருக்கிறார் பாலிவுட் நடிகை ஆலியா பட்.

பாலிவுட்டின் காதல் ஜோடி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் என்பது உலகறிந்தது. தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஆலியா தனது திருமணம் குறித்து பேசும் போதே, இந்த வகையான கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 2017இல் இயக்குநர் அயன் முகர்ஜியின் “பிரம்மாஸ்திரா“ திரைப்படத்தில் சந்தித்துக்கொண்ட நடிகை ஆலியா மற்றும் ரன்பீர் இருவரும் காதலில் விழுந்ததாகக் கூறப்பட்டது.

ஆனாலும் ரகசியம் காத்துவந்த இந்த ஜோடி கடந்த 2018 இல் நடிகை சோனம் கபூரின் திருமணத்தின்போது தங்களது உறவை ஒப்புக்கொண்டனர்.

மேலும் திருமணம் குறித்து ரன்பீரிடம் கடந்த 2020இல் கேள்வி எழுப்பப்பட்டபோது கொரோனாவிடம் சிக்காமல் இருந்திருந்தால் எங்களது திருமணம் கோலாகலமாக முடிந்திருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றலா சென்றுவரும் இந்த ஜோடிகளைப் பார்க்கும் ரசிகர்கள் திருமணம் எப்போது கேள்வி எழுப்பிவருகின்றனர். தொலைக்காட்சி நேர்காணல்களில் அவ்வபோது இந்தக் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆலியாபட் தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்டதையடுத்து அவரிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு பதிலளித்த நடிகை ஆலியா பட், ஏற்கனவே ரன்பீர் கபூருடன் திருமணம் செய்துகொண்டதாக உணர்கிறேன் என நெகிழ்ச்சியுடம் பதிலளித்துள்ளார். மேலும் தங்களது திருமணத்தில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பது குறித்துப் பேசிய அவர் எல்லாவற்றுக்கும் ஒரு காரணமுண்டு. நாங்கள் எப்போது திருமணம் செய்கிறோமோ அது சரியாகவும் அழகாகவும் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ஆலியா பட் மனதளவில் ரன்பீரை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு விட்டேன் என்று கூறியிருக்கும் இந்தக் கருத்து தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்