நெஞ்சுக்கு நீதி டீசர் வெளியானது!

Date:

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’நெஞ்சுக்கு நீதி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த டீசரை பார்க்கும்போது பொள்ளாச்சியில் நடந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் குறித்த கதையம்சம் கொண்டது என்று தெரியவருகிறது.

வரிசையாக பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படும் நிலையில் அதை காவல்துறை அதிகாரி உதயநிதி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.

“என்னை பொருத்தவரை நடுவுல நிக்குறது நியூட்ரல் இல்லை, நியாயத்தின் பக்கம் நிக்கறதுதான் நியூட்ரல்“ என்ற உதயநிதி ஸ்டாலின் வசனத்துடன் முடிவடைந்துள்ள இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி, மயில்சாமி, இளவரசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு திபு நிபுனன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ரிலீஸ் திகதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்