உயர்தர பரீட்சைக்காலத்தில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகளை திறக்காதீர்கள்!

Date:

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பாடசாலைகளை திறக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

பெபப்ரவரி 4ஆம் திகதிக்குள் அனைத்துப் பாடசாலைகளையும் மூட வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைத் தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலைஅமைப்பில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

ஜனவரி 10 ஆம் திகதி அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு வரவழைக்க அரசு எடுத்த முடிவு,  மாணவர்களிடையே வைரஸ் பரவலை அதிகரித்தது என்றார்.

அனைத்துப் பாடசாலைகளும் பெப்ரவரி 4ஆம் திகதி மூடப்பட்டு, மார்ச் முதல் வாரத்தில் மட்டுமே சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து மீண்டும் திறக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

நெருக்கடி கட்டத்தில் நேட்டோவிற்கு வழங்கப்படும் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள், போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா திட்டம்

நெருக்கடி காலங்களில் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு உதவுவதற்காக வழங்கப்படும் போர் விமானங்கள்,...

காத்தான்குடியில் தீவிபத்து

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு (26) ஏற்பட்ட...

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்