கொரோனாவினால் இழந்த 2 வருடங்களை கோட்டாவிற்கு வழங்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்: டயானா!

Date:

கொவிட் நோயினால் இழந்த இரண்டு வருடங்களை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேநேரம், பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே டயானா கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

COVID-19 நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தால் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை.

எனவே ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும், எனவே தமக்குக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

நாங்கள் இங்கு இருக்கும் போது ஜனாதிபதி தோல்வியடைவதற்கு இடமளிக்க மாட்டோம் என டயானா கமகே தெரிவித்துள்ளார்.

“கோவிட் நெருக்கடியால் உலகம் முழுவதும் சிக்கலில் உள்ளது, இன்று இங்கிலாந்தில் வரிசைகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

அந்த நாடுகளிலும் இன்று உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

WWE வீரர் பிரான்சன் ரீட் காலமானார்

WWE நிறுவனம், அதன் சூப்பர் ஸ்டார் பிரான்சன் ரீட் (Bronson Reed)...

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்