எதிர்வரும் நாட்களில் அவசர நிலைமைகள் தவிர மின்வெட்டுக்கான தேவை ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் லொக்குகே, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையமும் அடுத்த சில நாட்களில் முழுமையாக இயங்கும் என தெரிவித்தார்.
300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலக்கரி அனல்மின் நிலையம் இம்மாதம் 25 அல்லது 26ஆம் திகதிக்குள் முழுமையாக செயல்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார்.
எனவே எதிர்காலத்தில் மின்வெட்டு தேவையென நம்பவில்லை என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.




