இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஆற்றுப்படுகையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை நேற்று (19) அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அரசாங்க அதிபரின் பணிப்பின் கீழ் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட இடர் முகாமைத்துவ பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினர் இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடத்துக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தார்கள்.
இதன்போது சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறும் இடத்தில் இராணுவ காவலரண் அமைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.





