அமெரிக்கா கூட்டிய உலக ஜனநாயக மாநாடு

Date:

-கோவை நந்தன்-

ஜனாயகத்திற்கான சர்வதேச உச்சி மாநாடு என்கின்ற தொனிப் பொருளில் அமெரிக்க அதிபர் பைடன் தலைமையில் ஏகாதிபத்திய ஆதரவு சக்திகள் கடந்த வாரம் நடாத்திய மந்திராலோசனைகளே பலத்த விமர்சனங்களை கிளப்பிய கடந்த வருடஇறுதியின் பேசுபொருளாக அமைந்திருந்தது.

இன்றைய திகதிக்கு 195நாடுகளை கொண்ட (193+02) இந்த உலகப் பரப்பின் 80 நாடுகளின் தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த இனைய வழி மாநாட்டில் காத்திரமான முடிவுகள் ஏதாவது எடுக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

“அமெரிக்கா முதலில்”(America First) என்கிற கோஷத்துடன் முந்தைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா கைவிடுகிறது என்கிற தோற்றப்பாட்டை ஏற்ப்படுத்தவே இந்த மாநாட்டை. கூட்டினார் இன்றைய அதிபா் ஜோ பைடன் என்றே கூறவேண்டும்.

இந்த நிகழ்வின் அமர்வுகள் வாஷிங்டனின் அசாதாரண இறுமாப்பை வெளிப்படுத்தியதுடன்.அங்கு இடம்பெற்ற குழு நிலை விவாதங்கள் ஏகாதிபத்திய சதியாலோசனைகளால் நிரம்பி இருந்ததனையே அவதானிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர் இடதுசாரிய பார்வை கொண்ட அவதானிகள்.

வல்லாட்சிகளுக்கு எதிராக ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற போர்வையில், வல்லாட்சியின் மற்றொரு வடிவத்தால் நடாத்தப்பட்ட இந்த உச்சிமாநாட்டின உள்நோக்கம் ரஷ்யா மற்றும் சீனா மீதான உலகளாவிய அழுத்தத்தைத் தீவிரப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.

உலகெங்கிலும் நிறைந்து காணப்படும் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்குமான நீடித்த சவால்களை எதிர்கொள்வதே இந்த மாநாட்டின் நோக்கம் என ஆரம்ப உரையில் தெரவித்தார் உலக ஜனநாயக விரோத்ததின் பிதாமக்களான அமெரிக்க அரச நிர்வாகத்தின் இன்றைய தலைவர் ஜோ பைடன் அவர்கள், ஆரம்பத்தில் இடம்பெற்ற அவரது தலைமை உரை பெருத்த கேலிக்கூத்தாகவும் அமெரிக்க பேரரசின் பகட்டாராவாரத்தை வெளிப்படுத்துவதுமாகவே அமைந்திருந்தது.

நீதி,பேச்சு சுதந்திரம்,ஒன்று கூடுவதற்கான சுதந்திரம்,மதச் சுதந்திரம்,பத்திரிகை சுதந்திரம்,மற்றும் ஒவ்வொரு தனிமனிதருக்குமான உள்ளார்ந்த மனித உரிமைகள் போன்றவை பற்றியெல்லாம் பைடனின் தலைமையுரையில் வலியுறுத்தப் பட்டிருந்தது.உலகின் ஜனநாயக-விரோத பாசிச கும்பலை கூட்டிவைத்துக் கொண்டு அவர்களின் தலைமகன் ஆற்றிய இந்த தலைமையுரையை உலகமே வேடிக்கையுடன் பார்த்தது.

கடந்த ஐந்தாண்டுகளில் பல ஆயிரக் கணக்கான தனது சொந்த நாட்டு ஏழை அப்பாவி மக்களின் படுகொலைக்கு நேரடி பொறுப்பாளராக இருந்து,மனிதகுலத்திற்கு எதிராக குற்றங்கள் இழைத்ததாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சசாட்டப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரொட்ரிகோ துதர்த்தெ (Rodrigo Duterte) அவர்களும் பைடனின் தலைமை உரையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.கொரோனா பெரும்தொற்றுக்கு எதிராக உலகமே போராடிக்கொண்டிருக்க,உலக சுகாதார ஸ்தாபனம்,அண்டைய நாடுகள் போன்றனவற்றின் அறிவுறுத்தல்,நடைமுறைகள் அனைத்தையும் மீறிய ஏகாதிபத்திய சிந்தனையால் நாட்டின் 6லட்சத்திற்கும் மேற்பட்ட தொற்று மரணங்களுக்கு காரணமான பிரேசில் நாட்டின் பாசிச ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) அவர்களும் கூடவே இருந்து ரசித்துக் கொண்டிருந்தார்.

தமது தலைவனின் தலைமை உரையை. பிரேசிலிய மக்களின் இந்த பாரிய மரணங்களுக்கான குற்றங்களுடன் அந்த நாட்டின் செனட் ஆணைக்குழுவின் விசாரணையை எதிர்நோக்கி உள்ளார் பிரேசிலின் இராணுவத் தளபதியாக இருந்த வெப்ப லைய ட்ரம்ப்(Tropical Triumph), என வர்ணிக்கப்பட்ட போல்சனாரோ என்பதும்,பிரேசிலின் பாரம்பரிய அரசியலமைப்பை திருத்தி தனது சர்வாதிகார ஆட்சியை தொடர முயலுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த மாநாட்டில் கலந்துகொண்ட 80நாடுகளின் தலைவர்களுக்கும் அமெரிக்க அதிபர் பைடனின் கையெழுத்து தாங்கிய ஒரு கடிதம் வழங்கப்பட்டிருந்தது. “குடி மக்கள் அனைவரையும் செழிப்பாக்கும் சமூகங்களை மதித்து அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைக் கட்டமைக்க பணியாற்றுவதில் உங்களின் பங்களிப்பை நாங்கள் அங்கீகரித்து பாராட்டுகிறோம் என்று குறிப்பிட்ட அந்தக் கடிதம் அதிகூடிய ஜனநாயக, சமத்துவ,உள்ளார்ந்த மற்றும் நீடித்த உலகை நாம் எப்படி பேணுவது’ என்பதற்கான உங்களின் கருத்துக்களைக் கேட்கவே நான் இந்த மாநாட்டை கூட்டியுள்ளேன் என தொடர்ந்து சென்றது.

உலகெங்கிலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அரசாங்கங்களை நிலைகுலைய செய்து பதவியிலிருந்து தூக்கிவீசிய பாரிய வரலாற்றைக் கொண்ட அமெரிக்கா, ஜனநாயக பாதுகாப்பு குறித்து மாநாடு நடாத்தி கருத்து வெளியிடுவதுதான் வேடிக்கை.

வல்லாட்சியாளர்கள் ‘அவர்களின் சொந்த அதிகாரத்தை முன்னெடுக்கவும், உலகெங்கிலும் அவர்களின் செல்வாக்கை விரிவாக்கவும்,அவர்களின் ஒடுக்குமுறை கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நியாயப்படுத்தவும் முயன்று’ வருவதாக மாநாட்டின் சம்பாசனைகளின் போது தெரிவித்த பைடன் யாரெல்லாம் அவரது அந்த வல்லர்சுகளுக்குள் அடங்குவர் என தெரிவிக்கவில்லை. வல்லாட்சியாளர்கள் என அவர் குறிப்பிட்டது,தமக்கும் தமது ஆதரவு நாடுகளின் வல்லாளுமைக்கு சவாலான சீனா,ரஷ்யா,ஈரான் வடகொரியா போன்ற நாடுகளைத்தான் என்பது புரியாதவர்களுக்கும் புரிந்த ஒன்றுதான்.இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த மற்றும் அழைக்கப் படாத நாடுகளின் பட்டியல் இதனை மேலும் தெள்ளத் தெளிவாககுகிறது.

அமெரிக்க அரசின் புவிசார் அரசியல் நடவடிக்கைகளுக்கு அனுசரணையாக இருக்கும் மற்றும் அதற்க்கு எதிரான நாடுகளின் பகை நாடுகளுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்படாத அதேவேளை “ஒரே சீனா” கொள்கையை நிராகரித்து அதற்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சீனாவின் முன்னைய நிலப்பரப்பான இன்றைய தாய்வான் நாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்ததை உதாரணமாக குறிப்பிடலாம்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு சாதகமான, குறியீடுகளைக் கொண்ட பாகிஸ்தான்,இந்தியா, பிலிப்பின்ஸ், போலந்து போன்ற நாடுகள் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டதும், பாதகமான குறியீடுகளைக் கொண்ட வங்கதேசம், பூட்டான் இலங்கை போன்ற நாடுகள் அழைக்கப்படாததும் அமெரிக்காவின் ஜனநாயகம் குறித்த கண்ணோட்டத்தையும் மாநாட்டின் உள்நோக்கத்தையும் வெளிச்சம் போடுகிறது.
வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதி எனக் கூறப்படும் குவான் குவைடோவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர்களில் ஒருவர், அமெரிக்க கைப்பொம்மையாக செயல்ப்படும் ஒரு டம்மி அரசியல் வாதியான அவரின் பிரசன்னம் ‘ஜனநாயகம்’ என்ற வார்த்தையையே கேலிக்குரிய தாக்கியது.இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலமாக அந்த நாட்டின் மக்களால் ஜனநாயக ரீதியில் அண்மையிலேயே நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட, எகாதிபத்தியங்களின் அராஜகங்களை கண்டிக்கும் நிக்கோலா மதுரோவை (Nicolas Maduro)வெளியேற்றி தனது கைப்பாவை குவைடோவை வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக நியமிக்க முயன்று வருகிறது வாஷிங்டன் .
உலகின் சர்வாதிகள் பலர் கலந்து கொண்ட இந்த ஜனநாயக மாநாட்டில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இடம்பெற்ற இரண்டு அமர்வுகளில் என்ன மந்திராலோசனை நடந்தது என்பதற்காண பதிலை காலம் தான் சொல்லவேண்டும்; இந்த திரைமறைவு ஆலோசனைகளில் முதலாவததை வல்லரசுகளின் இன்றைய தலைமகன் அமெரிக்க அதிபர் பைடனும் இரண்டாவதை ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து உலக அரங்கில் ஜேர்மன் இராணுவ ஆளுமையை மேம்படுத்திய ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயென்(Ursula von der Leyen)அம்மையாரும் கூட்டியிருநதனர்.

பத்திரிக்கையாளர்களின் கருத்துக்களுக்காக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டால்,அவர்களின் சட்டப் பாதுகாப்புக்கான கட்டணத்தைச் செலுத்த உலகளாவிய “அவதூறு பாதுகாப்பு நிதியம்” ஒன்று உருவாக்கப்படும் எனவும் இந்த மாநாடில் தீர்மானிக்கப்பட்டது.

வீகிலீக்சின்(Wikileaks) நிறுவனர் ஜூலியன் அசான்ஜ்(Julian Assange) அவர்களை பல வருடங்களாக துன்புறுத்தி சிறையில் அடைத்து வைத்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு ஆதரவை வழங்கவென அமைக்கப்படும்,இந்த நிதியத்தின் இலக்கு அமெரிக்க போட்டியாளர்களுக்கு எதிராக எழுதும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவை வழங்குவதாகவே இருக்கப் போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை
மனித உரிமைகள்,ஜனநாயகம் என்கிற வார்த்தைகளை உச்சரிக்கவே தகுதியற்ற அமெரிக்க அதிபர் ஒருவர் கூட்டிய ஜனநாயகத்திற்கான இந்த மாநாடு,அதிகரித்துவரும் அமெரிக்க எதிர்ப்பலைகளை கட்டுப்படுத்தவும் இப்போது வெகுவாக முன்னெடுக்கப்பட்டு வரும் வாஷிங்டனின் போர் தயாரிப்புகளை நியாயப்படுத்தவுமே என்பது வெள்ளிடை மலை.முன்னைய பனிப்போா் காலம்போல மீண்டும் உலகை இரண்டு குழுக்களாக பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறதா அமெரிக்கா…? என்கிற ஐயப்பாட்டையும் மாநாடு எழுப்பி நிற்கிறது..

உலகில் வலுவிழந்து வரும் தனிநபா் சுதந்திரம், மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி, நிா்வாக அமைப்புகளின் சுதந்திரம், ஆட்சியாளா்களின் பொறுப்பேற்கும் தன்மை, மாற்றுக் கருத்துகளையும் மதித்து நடத்தல் போன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளும்,வழிமுறைகளும் அமெரிக்கா உட்பட்ட அனைத்து நாடுகளாலும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் போது தான் ஜனநாயகம் முழுமை பெறும்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்