சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125வது நினைவு தினம் திருகோணமலையில் அனுஷ்டிப்பு

Date:

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 வது நினைவுதினம் திருகோணமலையில் நேற்று (13) நினைவுகூறப்பட்டது

1893 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி வரை சென்ற பயணமானது வரலாற்று சிறப்புமிக்க இலங்கை விஜயமாக ஆண்டாண்டு காலம் நினைவு கூர்ந்து வருகின்றனர்

நேற்று (13) அந்த விஜயத்தின் 125வது வருட நினைவினை ஒட்டி திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் அதிபர் பத்மசீலன் அவர்களின் தலைமையில்
திருகோணமலை சண்முகா மகளிர் கல்லூரியில் இருந்து நடைபவனியாக திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வரை சென்று ஓர் ஆண்டு விழா முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வினை கல்லூரிகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், இந்து மன்றம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழையமாணவர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது

இந்நிகழ்வில் ஆன்மிக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹாராஜ், பிரதம அதிதியாக இந்தியாவின் கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மிஷன் ஸ்ரீமத் சுவாமி ஹரிவ்ரதா னந்தஜீ மஹராஜ், விசேட அதிதிகளாக திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் சி. சிரீதரன், கிழக்கு மாகாண தொற்றுநோய் இயல் நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். அருட்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

-ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்