கொழும்பு தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு… வடக்கிலிருந்தே சென்றது!

Date:

பொரளையில் உள்ள All Saints’ Church இல் கைப்பற்றப்பட்ட கைக்குண்டுடன் தொடர்புடைய மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக 56 வயதான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் அவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தேவாலயத்தில் உள்ள சிலையொன்றின் அருகிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தீப்பிடித்து வெடிக்கும் வகையில் நாடா, ரப்பர் பாண்டுகள், தீப்பெட்டிகள் மற்றும் நுளம்புத்திரி சுருளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது.

தேவாலயத்தில் பணியாளராக கடமையாற்றிய மருதானை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கைக்குண்டை வைத்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ தெரிவித்துள்ளார்.

விசாரணையில், சந்தேகநபர் தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனை பயன்படுத்தியிருப்பதும், குறித்த பகுதியில் வெடிமருந்துகளை வைப்பதற்காக அடிக்கடி அந்த வளாகத்திற்கு சென்று வருவதும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கடந்த 16 வருடங்களாக தேவாலயத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், கடந்த 09 மாதங்களாக தேவாலய வளாகத்தில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலதிக விசாரணைகளின் போது சந்தேக நபரின் வசிப்பிடத்திலிருந்து கைக்குண்டு அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நாடா, ரப்பர் பாண்டுகள், தீப்பெட்டிகள் மற்றும் நுளம்புத்திரி சுருள் ஆகியவற்றின் பாகங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர் இவ்வாறு செயற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டு மன்னாரிலிருந்த பெறப்பட்டது விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

சில மாதங்களின் முன்னர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கைப்பற்றப்பட்ட கைக்குண்டை ஒத்ததாக இந்த கைக்குண்டு காணப்படுகிறது. பாதுகாப்பு கொழுக்கி அகற்றப்பட்டு, கைக்குண்டை சுற்றி ரேப் ஒட்டப்பட்டுள்ளது. நுளம்புத்திரி சுருள் எரிவதன் மூலம் கைக்குண்டு வெடிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்