கல்முனை காணிப்பதிவகத்தில் 8 பேருக்கு கொரோனா!

Date:

கல்முனை மாவட்ட காணிப் பதிவகத்தில் 8 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஜனவரி 22 திகதி வரை அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உள்ள மேற்படி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 8 பேர் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.

சுமார் 31 உத்தியோகத்தர்களிடம் இன்று(13) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது இவ்வாறு 8 பேர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா அனர்த்தம் இலங்கையில் பரவல் அடைந்த பிற்பாடு இக்காணி பதிவகத்தில் 3வது தடவையாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

-பா.டிலான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்