பூநகரி பிரதேசசபைக்கு புதிய தவிசாளர் நியமனம்!

Date:

பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிறி ரஞ்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச சபையின் முதன்மை உறுப்பினரும் முழங்காவில் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியருமாகன இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே இரண்டாவது தடவையாக கடந்த 15ம் திகதி தோற்கடிக்கப்பட்டது.

22ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 23.11.2021 அன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது. குறித்த பாதீடு 2 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாவது பாதீடு 15.12.2021 சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இன்றைய தினம் குறித்த பாதீடு 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வசமிருந்த பூநகரி பிரதேச சபை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினாலேயே தோற்கடிக்கப்பட்டது.

இதன்போது குறித்த வரவு செலவு திட்டத்திற்கு 11 பேர் கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர்களில் தவிசாளர் தவிர்ந்த 10 பேரும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.

தவிசாளர் மற்றும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இருவரும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் நால்வரும் ஆதரவாக வாக்களித்தனர். ஈபிடிபி கட்சி உறுப்பினர் நடுநிலை வகித்திருந்தார்.

இதனால் குறித்த வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது சமர்ப்பிப்பும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக்கூட்மைப்பினர் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்று 11 ஆசனங்களுடன் ஆட்சி அமைத்தனர். தவிசாளரை பதவி விலகுமாறு பல தடவைகள் ஆளும் தரப்பினரால் கோரிக்கை விடப்பட்ட நிலையில் இன்றைய தினம் குறித்த வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினராலேயே தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்