31.3 C
Jaffna
March 28, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

மிகப்பெரிய ஆச்சரியம்: 66 மில்லியன் ஆண்டு பழமைவாய்ந்த டைனோசர் முட்டை; அதற்குள் இருக்கும் உருமாறாக் கரு!

முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கத் தயாராகிக்கொண்டிருந்த, முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட டைனோசர் கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.டைனசார் முட்டையில் கரு இன்னும் உருமாறாமல் இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

தெற்கு சீனாவில் உள்ள கான்ச்சோ (Ganzhou) பகுதியில் இந்த கரு கண்டுபிடிக்கப்பட்டது. இது குறைந்தது 66 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்படுகிறது.

ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஸ்டீஃவ் புருசெட், இதுவரை கண்டிராத அளவில் அழகான தொல்பொருள் என, முட்டைக்குள் காணப்படும் டைனசார் கருவை வர்ணித்திருந்தார்.

இறகுகள் கொண்ட தெரோபாட் டைனோசர் அல்லது ஓவிராப்டோரோசர்  வகையிலிருந்து அந்த முட்டை வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகைய டைனசார்கள், இக்காலப் பறவைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று நம்பப்படுகிறது.

ஓவிராப்டோரோசர்கள், 100 மில்லியன் முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு – கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில் இப்போது ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் வாழ்ந்த இறகுகள் கொண்ட டைனோசர்களாகும்.

பேராசிரியர் ஸ்டீவ் புருசாட்டே, கரு குஞ்சு பொரிக்கும் விளிம்பில் இருப்பதாகவும் ட்வீட் செய்துள்ளார்.

அந்த கருவிற்கு யிங்லியாங் என பெயரிடப்பட்டுள்ளது. அதன் தலை முதல் வால் வரை 27cm நீளம் கொண்டது. சீனாவில் உள்ள யிங்லியாங் ஸ்டோன் நேச்சர் ஹிஸ்டரி மியூசியத்தில் 6.7 அங்குல நீளமுள்ள முட்டைக்குள் தங்கியுள்ளது.

முட்டை முதன்முதலில் 2000 இல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் 10 ஆண்டுகள் சேமிப்பில் வைக்கப்பட்டது.

அருங்காட்சியகத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கி, பழைய புதைபடிவங்கள் வரிசைப்படுத்தப்பட்டபோதுதான், ஆராய்ச்சியாளர்கள் முட்டையின் மீது கவனம் செலுத்தினர். அதன் பின்னரே கரு கண்டறியப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

Leave a Comment