ஃபைசர் கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி!

Date:

அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளர்கள், கோவிட்-19க்கு எதிரான முதல் வாய்வழி மாத்திரையை அங்கீகரித்துள்ளனர்.  ஃபைசர் நிறுவத்தின் மாத்திரைக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் மோசமான விளைவுகளைத் தடுக்க பயனர்கள் வீட்டிலேயே இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள முடியும்.

அந்த முடிவைப் பாராட்டிய ஜனாதிபதி ஜோ பைடன், இந்த மாத்திரை, நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் மரணங்களையும் குறைக்க உதவும் என்றார்.

அடுத்த மாதம் 250,000 முறை உட்கொள்வதற்குத் தேவையான மாத்திரைகள் பெறப்படும் என்று பைடன் தெரிவித்துள்ளார்.

ஃபைசர் மாத்திரைக்கு அனுமதியளிக்கும் முடிவை, நேற்று புதன்கிழமை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்அறிவித்தது.

ஃபைசரின் மருத்துவ பரிசோதனையின் தரவு, கடுமையான நோயின் அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளைத் தடுப்பதில்  90 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. சமீபத்திய ஆய்வகத் தரவு, ஒமைக்ரோனிற்கு எதிராக மருந்து அதன் செயல்திறனைத் தக்கவைத்துக்கொள்வதாகக் கூறுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்