நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து; பிரதமர் அவசர ஆலோசனை: ராஜ்நாத் சிங் விபத்துப் பகுதிக்கு விரைவு

Date:

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாககவும் விபத்து நடந்த குன்னூர் பகுதிக்கு ராஜ்நாத் சிங் வருகை தர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர் மனைவியுடன் பயணம் செய்தாகக் கூறப்படும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அவசர ஆலாசனை நடத்தினார்.

வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக தெரிகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று காலை 12.20 மணியளவில் வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. 4 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை யார் யார் இறந்துள்ளனர் எனஅடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. குன்னூர் மலைப்பகுதியில் காட்டேரி என்ற இடத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சருடன் ஆலோசனை நடத்திவருகிறார். விபத்து குறித்து ராஜ்நாத் சிங் பிரதமரிடம் விளக்கமளித்து வருகிறார்.

விரைவில் ராஜ்நாத் சிங் குன்னூர் விபத்துப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்