நானுஓயா விபத்தில் ஒருவர் படுகாயம்!

Date:

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று(08) காலை 9 மணியளவில் கனரக டிப்பர் லொறி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்குராங்கெத்த ஹேவாஹெட்ட பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றும் தலவாக்கலை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சென்ற கனரக டிப்பர் லொறி ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கனரக டிப்பர் லொறியின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளன.

லொறியின் சாரதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

யாழில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 27 வயது இளைஞன் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச்...

மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் 64 ரன்களுக்கு சுருண்டது பங்களாதேஷ் அணி

அவுஸ்​திரேலியா - பங்களாதேஷ் அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 2வது டெஸ்ட்...

யாழ் ஊர்காவற்றுறை வீதியில் விபத்து !

யாழ்ப்பாணம் -  ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்