யாழில். விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

Date:

ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில்  பிரதமர்  கலாநிதி ஹரிணி அமரசூரிய மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.

இதன்போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் பேராதோனியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 76 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கியதுடன், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...

தென்னக்கோன் உள்ளிட்ட 9 பொலிஸ்காரர்களிற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக,...

ஊரான் வீட்டு பணத்தில் ஸ்வீட் சாப்பிட்ட மஹிந்த குடும்பம்: நீதிமன்றத்தில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மகளிர் பிரிவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்