எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 13,832 மீனவர்களுக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
1,200 மீனவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய விஜேசேகர, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மீனவர்கள் 15,032 பேர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் 10,175 மீனவர்களுக்கும், கொழும்பில் 2,956 மீனவர்களுக்கும், களுத்துறையில் 701 மீனவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் 1,200 மீனவர்களுக்கு தகவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும் என்று அவர் கூறினார்.




