அரச சொத்துக்களை வேகமாக விற்பனை செய்யும் அரசாங்கம்!

Date:

அரச காணிகளையோ அரச சொத்துக்களையோ ஒரு அங்குலத்தைக்கூட விற்க மாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அரச வளங்களை அதிவேகமாக விற்பனை செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, நாளாந்த பொருளாதார வீழ்ச்சியுடன் அரச சொத்துக்களை விற்பனை செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது புலனாகிறது.

விவசாய சமூகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் என்ற வாக்குறுதியுடன் உரத்தை இலவசமாக வழங்குவதாக அரசாங்கம் கூறியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மகாவலி வலயம் மற்றும் மலையகப் பகுதிகளில் உள்ள விவசாய சமூகங்கள் உரத் தட்டுப்பாடு காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் கூறினார்.

உர நெருக்கடியானது பெரும் போகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், தவறான கொள்கைகளினால் அரசாங்கம் தனது பொறுப்புகளில் தோல்வியடைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தமது அணி தலைமையிலான எதிர்கால அரசாங்கத்தின் கீழ் உரத்தை இலவசமாக வழங்குவதாக உறுதியளித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நெல்லியடி பொதுச்சந்தை மலசலகூடங்களில் சுகாதார சீர்கேடு

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார...

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...

ரோஹன விஜேவீர குடும்பத்திற்காக ரூ.26 மில்லியன் செலவு

மறைந்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) நிறுவனர் ரோஹன விஜேவீரவின் குடும்பத்தைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்