பிரித்தானியாவில் தீவிபத்தில் உயிரிழந்த இலங்கை குடும்பத்தின் புகைப்படம் வெளியானது!

Date:

பிரித்தானியாவில் தீயில் கருகி உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தெற்கு-ஈட் பெக்ஸ்லிஹீத்தில் உள்ள அவர்களது வீட்டில் தீ பரவியதில், வீட்டிலிருந்த நான்கு பேர் கருகி உயிரிழந்தனர்.

வியாழன் இரவு 8.30 மணியளவில், கணவர் யோகன் தங்கவடிவேல் தனது வேலையிடத்தில் இருந்தபோது, மனைவியின் தொலைபேசி அழைப்பு வந்தது. ‘நெருப்பு… நெருப்பு’ என மனைவியின் உதவிக்குரல் ஒலித்து, தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

அவர் வீட்டுக்கு ஓடிச்சென்ற போது, தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்றனர்.

கருகிய வீட்டிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்ட போது, யோகன் தங்கவடிவேல் கதறி அழுது தரையில் வீழ்ந்த காட்சி மனதை பிசைவதாக அமைந்திருந்தது. அவரால் பேச முடியவில்லை.

மனைவி நிருபா, ஒரு வயது மகள் ஷஸ்னா, நான்கு வயது மகன் தபீஷ், மனைவியின் தாய் ஆகியோர் உயிரிழந்தனர். மைத்துனர் ஒருவர் மேல் மாடி யன்னலால் கீழே குதித்து தப்பித்தார். அவரது கால்கள் முறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1930களில் அமைக்கப்பட்ட அந்த கட்டிடத்தை 3 மாதங்களின் முன்னரே, , 425,000 பவுண்ஸிற்கு அவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

மனைவியின் தாயார் நேற்று இலங்கை திரும்பவிருந்தார். அவரது பயண பொதிகளை தயார் செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்தது.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்