24.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர்நாள் அனுட்டிக்க 51 பேருக்கு தடையுத்தரவு!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த 51 பேருக்கு தடையுத்தரவு இன்று விதிக்கப்பட்டது. கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ்வாறு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன. குறித்த துயிலுமில்லங்களில் கடந்த 2017 மற்றம் 18ம் ஆண்டுகளில் மாவீர்நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

இந்த நிலயைில் 2019ம் ஆண்டுக்க பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மாவீரர் நாள் நினைவேந்தல்களிற்கு தடைகள் பிறப்பிக்கப்பட்டன. எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலயைில் இன்யை தினம் தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிசாரால், 9 பேருக்கு எதிராக இன்று நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபைதவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் தவபாலன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான, சுப்பையா, சிவகுமார், இயேசுதாசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி ஆகியோருக்கே இவ்வாறு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதேவேளை தர்மபுரம் பொலிசாரால் 02 பேருக்கும், அக்கராயன் பொலிசாரால் 02 பேருக்கும், பளை பொலிசாரால்18 பேருக்கும் , முழங்காவில் பொலிசாரால் 04 பேருக்கும், மருதங்கேணி பொலிசாரால் 09 பேருக்கும், பூநகரி பொலிசாரால் 07 பேருக்கும், தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த நபர்கள் அல்லது அவர்களின் உறவுகளோ, ஆர்வலர்களோ சமய குருமார்களோ, ஒத்துழைப்பாளர்களோ, நபர்களுா யாவரும் தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ அமைப்பின் இறந்தவர்களை நினைந்து எந்த செயலையும் குறித்த காலப்பகுதியில் செய்ய்கூடாது என கட்டளை வழங்குமாறு நீதிமன்றில் தடையுத்தரவு கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil

Leave a Comment