ஒரு பாடலுக்கு நடனமாடும் சமந்தா!

Date:

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சுமார் 250 கோடி ரூபாய் செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் இந்த பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஒருவரை நடனமாட வைக்க திட்டமிட்டதாகவும், ஆனால் தற்போது சமந்தாவை நடனம் ஆட வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரும் சமந்தாவின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த பாடலுக்கு அவர் நடனமாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்