வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் நிறைவேறியுள்ளது.
இன்று (15) காலை சபை அமர்வின் போது, வரவு 2022ஆம் ஆண்டுக்கான செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அமர்வில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் வரவு செலவு திட்டத்தை ஆதரித்தனர்.
இதையடுத்து ஏகமனதாக வரவு செலவு திட்டம் நிறைவேறியது.
இன்றைய அமர்வில் ஈ.பி.டி.பி கலந்து கொள்ளவில்லை.
வடக்கு கிழக்கில் உள்ள உள்ளூராட்சிசபைகளில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேறிய முதலாவது சபை, வலி தெற்கு பிரதேசசபையென்பதும் குறிப்பிடத்தக்கது.



