23 இந்திய மீனவர்களிற்கும் நாளை வரை விளக்கமறியல்!

Date:

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தபோது கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களுக்கு நாளை வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காணிளி ஊடாக இடம் பெற்ற விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இவ் உத்தரவை வழங்கியுள்ளது.

இம் மீனவர்கள் 23 பேர் சார்பிலும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி லோ.குகதாஸ் ஆஜராகியிருந்தார்.

கைது செய்யப்பட்ட 23 மீனவர்களுக்கெதிராகவும் எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்டமை, தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தியமை, அனுமதி பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி நாளை வரை வழக்கை ஒத்திவைத்ததுடன் நாளை குறித்த 23 மீனவர்களையும் மன்றில் ஆயர்ப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

இம் மீனவர்கள் வழக்கு விசாரணைகளுக்கு யாழ் இந்திய துணை தூதாக அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.

இந்திய மீனவர்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டத்தரணி ஜோய் மகாதேவாவும் ஆஜராகியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

இன்றைய ராசி பலன் | 11.08.2026

## 🔮 இன்றைய ராசி பலன் | 11.08.2026 ♈ மேஷம்: புதிய...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்