இன்று முரட்டு சிங்கிள்களிற்கான நாள்!

Date:

இன்று சர்வதேச ஒற்றையர் தினம் (Singles’ Day). அதாவது, முரட்டு சிங்கிள்களிற்கான நாள்.

சீனாவில்தான் முதலில் ஒற்றையர் தினம் கொண்டாடப்பட்டது.

11.11 என்ற திகதியன்று ஒன்று என்ற எண் நான்கு முறை ஒன்றின் பின் ஒன்றாகத் தோன்றுகிறது. அதைப் பார்ப்பதற்குத் தூரத்தில் நால்வர் தனியே நிற்பது போல் இருக்கிறதல்லவா!

ஒன்று என்ற எண்ணின் உருவடிவம், சீன மொழியில் திருமணமாகாத ஆண் என்ற பொருளைக் கொண்ட சொல்லுடன் உருவத்தில் நெருக்கமாக உள்ளது.

1993ஆம் ஆண்டில் முதன்முதலாக ஒற்றையர் தினம் சீனாவில் அனுசரிக்கப்பட்டது. குறிப்பாக, ஒற்றையருக்கான மலிவு விற்பனைகள் அந்நாளன்று இடம்பெறும்.

இப்போது, சீனர்கள் அதிகம் வாழும் பல நாடுகளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இப்போது அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ஒற்றையர், திருமணமானவர் எனப் பலரும் இதனை வரவேற்கின்றனர்.

பெரிய வர்த்தகங்கள் இந்த நாளைச் சாதகமாகப் பயன்படுத்தி, விற்பனையை பெருக்கி வருகிறார்கள்..

சென்ற ஆண்டின் 11.11 நாளன்று Alibaba நிறுவனம் 74.1 பில்லியன் டொலர் அளவில் விற்பனை செய்தது!

சென்ற ஆண்டு அமெரிக்காவில் அதுபோன்ற Black Friday, Prime Day, Cyber Monday போன்ற மற்ற மலிவு விற்பனை நாள்களன்று 10.84 பில்லியன் டொலர் வரை மட்டுமே ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒற்றையர் தினத்தில் பெரு நிறுவனங்கள் எப்படி கல்லா கட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ளங்கள்.

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது....

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்