கோவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட பல நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரதங்கள் இன்று சேவையில் சேர்க்கப்படும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரவு அஞ்சல்கள் உட்பட 301 புகையிரத பயணங்கள் இன்று சேவையில் சேர்க்கப்படவுள்ளன.
இன்று முதல் அனைத்து அலுவலக புகையிரதங்களும் இயக்கப்படும்.
கடந்த சில நாட்களாக புகையிரதங்களைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், எனவே கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் கூடுதல் புகையிரதங்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு புகையிரதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்திய இலங்கை புகையிரத திணைக்களம், பயணிகள் எப்பொழுதும் புகையிரதங்களைப் பயன்படுத்தும் போது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.




