வத்தளை, மாபொல பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 5,921 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவராவார்.
அவர் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



