நாளை கொவிட்-19 தடுப்பு செயலணி கூடும் போது, புகையிரத பயணிகளுக்கு டிக்கெட் வழங்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அனுமதி வழங்கப்படும் என நம்புவதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
மாகாணங்களுக்கிடையிலான புகையிரதங்களையும் இயக்குவதற்கும் நாளை அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டுமே புகையிரதங்களில் பயணிக்க அனுமதிக்கும் முடிவை COVID-19 தடுப்பு செயலணி எடுத்துள்ளதால், இந்த முடிவை செயலணியால் மட்டுமே திருத்த முடியும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.



