சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சமீபத்தில் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா ஆகியோர்களும் தாதாசாகிப் பால்கே விருதுக்கு தகுதியானவர்கள் என்பதை மத்திய அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புவதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து வைரமுத்துவின் டுவிட்டில் கூறப்பட்டிருப்பதாவது:
பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.
கமல்ஹாசன் – பாரதிராஜா – இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்.



