கட்டிடங்களின் நிலையறிய சுகாதார அமைச்சின் கட்ட நிர்மாண பிரிவினர் அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேசங்களுக்கு விஜயம்!

Date:

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர். எம். தௌபீக் சுகாதார அமைச்சுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அட்டாளைச்சேனையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வைத்தியசாலை கட்டிடத்தை பூரணமாக கட்டிமுடிப்பது தொடர்பில் ஆராயும் களவிஜயம் சுகாதார அமைச்சின் கட்ட நிர்மான பிரிவின் பணிப்பாளர் ஸ்ரீரஜீபன் அடங்கிய குழுவினரின் பங்கெடுப்புடன் இடம்பெற்றது.

வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் எம்.ஐ. நபீல், அபிவிருத்திக்குழுவின் ஆலோசகர் வைத்தியர் கே.எல். நக்பர், யூ.எல். வாஹித், மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் முனாஸ்தீன் போன்றோர் விடுத்த வேண்டு கோளுக்கிணங்க அட்டாளைச்சேனையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வைத்தியசாலை கட்டிடத்தை விரைவாக பூரணப்படுத்தவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

இந்த களவிஜயத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்எம். தௌபீக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன், அமைச்சின் கட்ட நிர்மான பிரிவின் பணிப்பாளர் ஸ்ரீரஜீபன் அடங்கிய குழு, வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நிந்தவூர் ஆயுர்வேத தொற்றாநோய் ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சின் கட்ட நிர்மான பிரிவின் பணிப்பாளர் ஸ்ரீ  ரஜீபன் அடங்கிய குழுவினர் ஆயுர்வேத தொற்றாநோய் ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கே.எல். நக்பரிடம் நிர்மாணிக்கப்பட வேண்டிய வைத்தியசாலை கட்டிட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் சுவதாரணி மருந்துபொதிகளையும் பெற்றுக் கொண்டார்.

மேலும் நிந்தவூர் சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சின் கட்ட நிர்மான குழுவினர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரோசா நக்பரிடமும் கட்டிட நிர்மாணங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
-நூருல் ஹுதா உமர்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்