2021 ஐசிசி ரி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றிற்கு இலங்கை தகுதி பெற்றது. நேற்று நடந்த தகுதிச்சுற்று ஆட்டமொன்றில் அயர்லாந்தை 70 ஓட்டங்களால் இலங்கை வீழ்த்தியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 71 ஓட்டங்களையும், பதும் நிசங்க 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
இலங்கை ஒரு கட்டத்தில் 8 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டை இழந்திருந்த போது, நிசங்க, ஹசரங்க ஜோடி அணியை தூக்கி நிறுத்தியது.
அணித்தலைவர் தசுன் சானக்க ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ஜோசுவா லிட்டில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதன்படி, 172 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ பல்பர்னி41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மஹீஸ் தீக்சன 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த வெற்றியை தொடர்ந்து சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.