நரேந்திர மோடி- அனுர சந்திப்பு!

Date:

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இன்று (16) காலை இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை குதிரை சவாரிகள் மூலம் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் வரவேற்கப்பட்டார்.

அங்கு பூரண அரச மரியாதையுடன் 21 தோட்டாக்கள் சுடப்பட்டு வரவேற்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வரவேற்கப்பட்டார். அப்போது இந்திய ராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையும் நடந்தது.

அதன்பின், இரு தரப்பு பிரதிநிதிகளும் இரு நாட்டு தலைவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வில் இராஜதந்திரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு ஜனாதிபதி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை நினைவுகூரும் வகையில் ராஜ்காட்டில் உள்ள காந்தி தர்ஷன் வளாகத்தில் அசோக மரக்கன்று ஒன்றை நட்டு வைத்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, விருந்தினர் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.

 

பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) நடைபெற்றது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இரவு இடம்பெறவுள்ளது.

இன்றும் ஜனாதிபதி, இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் மற்றும் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

இந்த நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து இந்திய பெரிய அளவிலான வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...

இனி இந்த 8 விடயங்களை செய்ய TIN இலக்கம் அவசியம்!

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, 2026 நவம்பர் 1-ஆம் திகதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்