அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையை 24 மணிநேரமும் இயங்க வைக்க சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நடவடிக்கையெடுத்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், நேரில் சந்தித்து விடுத்து கோரிக்கையையடுத்து இந்த நடவடிக்கையை அமைச்சர் எடுத்துள்ளார்.
மாத்தளை மாநகரசபை முதல்வர் சந்தனம் பிரகாஸ், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால், கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வைத்தியசாலை சீராக இரவு நேரத்திலும் இயங்குவதற்கு வைத்தியர்கள் தங்கியிருக்க முடியாத நிலை நிலவுகிறது. கூடவே வைத்தியர் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதனை நிவர்த்திசெய்து தருமாறு கோரும் மகஜரை அமைச்சரிடம் கையளித்ததாகவும் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
இந்த விடயங்களை உடனடியான சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்த அமைச்சர் உடனடியாக வைத்தியரொருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தார். மேலும் அன்றே அவசர சிகிச்சைப்பிரிவை 24 மணிநேரமும் இயங்கவைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் இந்த சந்திப்பின் போது உத்தரவிட்டார். அதன்படி அன்றிரவே அவசர சிகிச்சைப்பிரிவு இயங்க ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக சந்திப்பின் பின்னர் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் நீர்பாசன அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் எஸ்.எச்.முனசிங்க, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்த்தன, மத்தியமாகாண ஆளுநர் லலித் யு கமகே, மாத்தளை முதல்வர் ச.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.




