சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிவரும் பெண்கள் மூவர் உடன் அமுலாகும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதற்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய நிசாந்தி செனவிரத்ன, ரேணுகா ஜெயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோர் இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில், பெண் பொலிஸ் அதிகாரிகள் மூவர் ஒரே தடவையில், பிரதி பொலிஸ் அதிபர்களாகத் தரமுயர்த்தப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதலாவது பிரதி பொலிஸ்மா அதிபராக பிம்ஷானி ஜசிங்காராச்சி கடமையாற்றி வரும் நிலையில், 4 பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் கடமையுள்ளனர்.
வரலாற்றில் முதல் முறையாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் டிஐஜி ரேணுகா ஜெயசுந்தரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டிஐஜி நிசாந்தி செனவிரத்ன பொலிஸ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பொறுப்பாளராகவும், டிஐஜி பத்மினி வீரசூரிய பொலிஸ் நலப்பிரிவுக்கு பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
![](https://pagetamil.com/wp-content/uploads/2021/10/image_b92c527801-283x300.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2021/10/image_ff5cfa7cc8-300x245.jpg)