நீதிமன்ற வளாகத்திலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம்

Date:

நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை உத்தியேகத்தர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அழைத்து வரப்பட்டு விசாரணையின் பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த சந்தேக நபருக்கு பிணையாளிகள் இன்மையினால் நீதிமன்ற உள்ளக வளாகத்தில் உள்ள சிறை கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவ்வேளை குறித்த சந்தேக நபர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடமிருந்து தப்பி நீதிமன்ற சுவர் மேல் குதித்து தப்பி சென்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டில் குறித்த சந்தேக நபர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தப்பி சென்ற சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் சுமார் 28 வயது மதிக்கத்தகக்கவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் மஹிந்த குடும்பத்தின் அதிர வைக்கும் ஊழல்கள்!

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே (Lady Ridgeway) சிறுவர் மருத்துவமனைக்கு CT...

பிள்ளையான், கூட்டாளிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்