பிரபல ரவுடி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்

Date:

பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.

பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.

குருவிட்ட பகுதியில் 5 மில்லியன் ரூபாய் பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், மற்றும் மிரிஹானவில் கையெறி குண்டுகளை வைத்திருத்தல் போன்ற குற்றங்களில் இவர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் குற்றச் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் போது, அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

எனினும், பதில் பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டுடன், விரிவான ஒருங்கிணைப்பின் மூலம், நேற்றைய தினம் (12) இரவு, பிரியந்த இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத்துறை அவரை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்