சாதாரண தர பரீட்சை எழுத வேண்டிய மாணவன் பலி

Date:

கிவுலேகம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் க.பொ.த. சாதாரண தர மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நிகவெரட்டிய, கிவுலேகம பகுதியில் இடம்பெற்ற குறித்த இத் துயரச் சம்பவத்தில், 16 வயது பாடசாலை மாணவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் தரப்பில் வழங்கப்பட்ட தகவலின்படி, விபத்து மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் ஏற்பட்டதாகவும், உயிரிழந்த மாணவன் தும்புள்ள மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் நிம்சாரா அபிமான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது, மாணவன் மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால், அவர் சாலைத் தவறி விலகிச் சென்று மோட்டார் சைக்கிள் கவிழ்ந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மாணவன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விபத்தில் உயிரிழந்த மாணவனின் உடல் மீதான பிரேத பரிசோதனை நிக்கவெரட்டிய பிரதேச மரண விசாரணை அதிகாரி ரஞ்சித் தர்மசிறியினால் நிக்கவெரட்டிய ஆதார மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

ஒக்டோபர் 17ஆம் திகதி வழக்கு விசாரணையின் பின்னரே பூரண நிம்மதி கிடைக்கும் என அனோஜனின் சகோதரன்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்