யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி பெண் பலி!

Date:

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , பேருந்து நிலைய வளாகத்தினுள் நின்ற வயோதிப பெண்ணொருவரை மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

வைத்திய சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் குறித்த வயோதிப பெண்ணுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் , சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்