லங்கா வைத்தியசாலை கைக்குண்டு: திருகோணமலையில் ஒருவர் கைது; வெள்ளைவான் கடத்தலென மனைவி முறைப்பாடு!

Date:

கொழும்பு, நாரஹேன்பிட்டி லங்கா தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்டதாக சொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், திருகோணமலை வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று காலை அரச புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வெள்ளை வாகனத்தில் வந்த குழுவினரால் தனது கணவன் கடத்திச் செல்லப்பட்டதாக, திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

லங்கா வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், கைக்குண்டை வைத்தார் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலுமொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று 3வது சந்தேகநபரும் கைதானார்.

நேற்று கைதானவர் முன்னாள் போராளினெ சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 40 வயதான அவர், தற்போது குண்டுகளை வெடிக்க வைப்பது தொடர்பாக 6 நாட்கள் காட்டுப்பகுதியில் பயிற்சி பெற்றதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என...

மீண்டும் பொருளாதார நெருக்கடியா? திட்டமிட்ட சதி குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை!

2028ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களின்...

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்